"மாநகரம்" திரைப்படம் மூலம் இயக்குநர் பயணத்தை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ்.அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் ரஜினி, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இதன் கதை அமைந்துள்ளது. வரும் ஆக. 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் முக்கிய அப்டேட் இன்று(மே 6) மாலை 6 மணிக்கு வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், கூலி படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு