கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் நேரில் ஆஜர்!
Dinamaalai May 06, 2025 11:48 PM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் சி.பி.சி.ஐ.டி. அலுவகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். கடந்த 2017 -ல் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உட்பட  12 பேர் கைது செய்யப்பட்டனர்.

 இந்த வழக்கு குறித்து இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட  நிலையில், சம்பவத்தன்று நடந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் உட்பட  சிலரின் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். 
 
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் சி.பி.சி.ஐ.டி. அலுவகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் பூங்குன்றனை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.