Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
விஜயா ஹாலில் அழுது கொண்டிருக்க மனோஜ் தன்னை ரூமை விட்டு வெளியில் போய் என சொல்லிவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதனால் ரவி மற்றும் முத்து சென்று அவர் ரூமை தட்டி எதற்காக அம்மாவை வெளியில் போக சொன்ன என கேட்கிறார்.
வெளியில் வந்து பார்க்கும் ரோகிணியை விஜயா அழுவதை பார்த்து சந்தோஷப்பட்டு உங்களை இப்படி பார்க்கவே கவலையா இருக்கு ஆண்ட்டி என்கிறார். உடனே முத்து மற்றும் ரவி இருவரும் சின்ன வயசில் தப்பு செஞ்சா முட்டி போட அம்மா சொல்லுவாங்க.
அதனால மனோஜ் முட்டி போட்டா அம்மா அமைதி ஆகிடுவாங்க என்கிறார். விஜயா தொடர்ந்து அழுது கொண்டே இருக்க கடுப்பான மனோஜ் இப்ப என்ன முட்டி போடணும் அப்படித்தானே என கேட்டு உடனே முட்டியில் நின்று விடுகிறார். இதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் மனோஜ் எனக்கு எங்க அம்மா தான் முக்கியம். அவங்க சொன்னாதான் நான் கேட்பேன் என விஜயாவை சிரிக்க சொல்கிறார். உடனே விஜயா நான் அழுகல நீ எழுந்திரு என்கிறார். இதை பார்க்கும் ரோகிணி உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார். விஜயாவும் அழுகையை நிறுத்தி விட மனோஜ் எழுந்திருந்து மன்னிச்சுக்கோங்க அம்மா என்கிறார்.
இதை பார்க்கும் விஜயா தான் கட்டிய தாயத்து வேலை செய்வதாக நினைத்து கொள்கிறார். ரூமிற்குள் வரும் மனோஜ் எதற்காக இவங்க ரொம்ப ட்ராமா பண்றாங்க என பேசிக்கொண்டு இருக்க தான் கட்டிய தாயத்து வேலை செய்வதாக ரோகிணி நினைத்துக் கொண்டிருக்கிறார்.
பார்வதி வீட்டில் விஜயா இருக்க அங்கு வரும் சிந்தாமணி உங்க மகன் என் வீட்டுக்கு வந்து பணத்தை எடுத்துட்டு போயிட்டான் என்கிறார். பின்ன பொண்டாட்டி பணத்தை திருடுனா சும்மாவா இருப்பான். அவளுக்கு ஆர்டர் கிடைக்கக்கூடாது என்று தான் நான் சொன்னேன்.
எப்படி திருடி அடி பட வைக்கணும்னு நான் சொல்லலை என்கிறார். இருந்தாலும் அவளை தடுக்கிறதுக்கு தானே என சிந்தாமணி கூற வர அதற்காக அவ கைய உடைக்க சொல்லல என கடுப்பாக திட்டிக் கொண்டிருக்கிறார். இனி நீங்கள் டான்ஸ் ஆட வர வேண்டாம் எனக் கூற நான் சலங்கை பூஜை செய்ய நினைத்ததாக சிந்தாமணி கூறுகிறார்.
இனிமே நீங்க மீனா விஷயத்தில தலையிடாதீங்க. அவ தொழிலை கெடுக்காதீங்க. அது உங்களுக்கு நல்லது இல்ல. அவ வேலையை கெடுக்க இனிமே நீங்க எதுவும் பண்ணவும் கூடாது.
மூணு மாசம் கூட ஆகல அதுக்குள்ள சலங்கை பூஜையா? இப்படி அவசர குடுக்கையா உங்களுக்கு என்னால் சொல்லித் தர முடியாது என அவரை திட்டி அனுப்பி விடுகிறார். சிந்தாமணியும் உங்க வீட்டு பொண்ணு தான் அதனால தான் இப்படி பேசுறீங்க என சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்று விடுகிறார்.
பார்வதியின் விஜயாவை ஆச்சரியமாக பார்க்க என்னவென்று கேட்கிறார் விஜயா. மீனாக்கு சப்போர்ட் பண்ற எனக் கேட்க என் வீட்டுக்காரர் சொன்னார். நிறைய எதிரி இருந்தா வாழ்க்கையில் ஜெயிச்சிடுவோம்னு. அதனால்தான் அவளுக்கு எதிரியே இல்லாம பண்ணேன் என்கிறார். இதை கேட்கும் பார்வதி இவ புத்தி திருந்தாது என்றும் ரீதியில் நினைத்துக் கொள்கிறார்.
ஜெயிலிலிருந்து வெளியில் வரும் சிட்டி மற்றும் பி ஏ வசீகரன் இருவரும் சேர்ந்து முத்துவிற்கு எதிராக பிளான் செய்து கொண்டிருக்கின்றனர். கோயிலுக்கு வரும் மீனா சத்யா மற்றும் சீதாவிடம் அவர்களுடைய எதிர்காலம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
The post first appeared on .