#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ஹைதராபாத் – ஹைதரபாத் – 05.05.2025
மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதுமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
டெல்லி கேபிடல்ஸ் அணி (133/7, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 41, அஷுதோஷ் ஷர்மா 41, விப்ராஜ் நிகம் 18, கே.எல். ராகுல் 10, பாட் கம்மின்ஸ் 3/19, உநத்கட் 1/13, ஹர்ஷல் படேல் 1/36, ஈஷன் மலிங்கா 1/28) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடவில்லை. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணிக்கு இன்று ஒரு பேட்டிங் கொலாப்ஸ். அந்த அணியின் ஒரு வீரர்கூட இன்று சரியாக விளையாடவில்லை.
12.1 ஓவர்களில் 6/62 என்ற நிலையில் இருந்த அணியின் ஸ்கோரை 19.4ஆவது ஓவரில் 7/128 என்ற நிலைக்கு கொண்டு வந்தவர்கள் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (36 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர்), அஷுதோஷ் ஷர்மா (26 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மர்றும் விப்ராஜ் நிகம் (17 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மூவருமாவர். மற்றாவர்கள் இன்று வந்தார்கள் போனார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது.
அதன் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை. டெல்லி அணியின் இன்னிங்க்ஸ் முடிந்தவுடன் மழை தொடங்கியது. இரவு 11.11க்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியிலிருந்து வெளியேறும் மூன்றாவது அணியானது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேரிவிட்டன.
News First Appeared in