தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கூலி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் சத்யராஜ், நடிகர் நாகார்ஜுனா, நடிகர் உபேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படம் இன்னும் நூறு நாட்களில் வெளியாக இருப்பதை அடுத்து படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் 35 வருடங்களுக்கு முன்பாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி படத்தில் ரஜினிகாந்தின் ஸ்டைல் போன்ற இருக்கிறது. இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் வைரல் ஆக்கி வருவதோடு 35 வருடங்கள் ஆனாலும் ரஜினிகாந்தின் ஸ்டைல் மட்டும் மாறவில்லை எனவும் மீண்டும் தளபதியை நினைவு படுத்திவிட்டனர் என்றும் வைரல் ஆக்கி வருகின்றனர்.