புதன் கிழமை அதிகாலை வேளையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளின் 9 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலா அல்லது விமானப்படை தாக்கியதா என்ற தகவல் இன்னும் தெரியவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
5 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் இந்தியாவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது
இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே நடந்துள்ள தீவிரவாதச் செயல் மற்றும் அதைத் தொடர்ந்த தாக்குதல்கள் வெட்கக்கேடானது என்று அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். விரைவில் இது முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.