ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்த்ரி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டு, நமது உரிமையை நிலைநாட்டியது. தீவிரவாத முகாம்கள் குறிவைத்து துல்லியமாக தாக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை இந்தியா தண்டித்துள்ளது. காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்தியது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.
இத்தாக்குதல் இந்தியாவில், வகுப்புவாத கலவரத்தை பரப்பும் முயற்சியை மேற்கொண்டது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் உதவியாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருந்துவருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.