பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கை முழு அளவிலான ராணுவ மோதலாக மாறக்கூடும் என ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் பழிவாங்கும் நடவடிக்கையை தூண்டி,
முழு அளவிலான ராணுவ மோதலாக மாறக்கூடும் என ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜப்பான், தெற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.