பகீர் சிசிடிவி காட்சிகள்... லாகூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள்... விண்ணை முட்டும் புகை மூட்டம் !
Dinamaalai May 08, 2025 02:48 PM

 


 
பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணமான லாகூரில் உள்ள வால்டன் சாலையில் இன்று மே 8ம் தேதி வியாழக்கிழமை காலை தொடர் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தான் ராணுவம் சீக்கியர்களை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்கும் நோக்கில் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

 

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் பதிவிட்ட  காட்சிகள், லாகூர் தெருக்களில் பீதியைக் கிளப்பியது.   அங்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் சாலைகளில் கூடினர். நகரின் வால்டன் சாலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3  வெடிச்சத்தங்கள் கேட்டதால், நகரத்தில் வானம் புகை மேகங்களால் சூழப்பட்டது.

அஸ்காரி 5 அருகே இரண்டு பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், கடற்படைக் கல்லூரியிலிருந்து புகை எழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.  பாகிஸ்தான் ஒப் சிந்தூருக்கு "தகுதியான பதில்" அளிப்பதாக உறுதியளித்த நிலையில், டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்தியா பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று அதிகாலை, எல்லைப் பதட்டங்கள் காரணமாக லாகூர் மற்றும் சியால்கோட்டில் உள்ள பல விமான வழித்தடங்கள் வணிக விமானங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.