பூரம் திருவிழாவில் திடீரென ஓட்டம் பிடித்த யானை… பதறிய பொதுமக்கள்… 65 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!
SeithiSolai Tamil May 08, 2025 04:48 PM

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலம் பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற்றது.

அப்போது யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோஷம் அடைந்து ஓட்டம் எடுத்தது. இதனால் அங்கு கூட்டத்தில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக யானை பாகன்கள் யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. யானை திடீரென மிரண்டதால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்ற நிலவியது.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.