“நீ தண்ணீர் பாட்டிலை நிரப்பி ஃபிரிட்ஜில் வைக்கவில்லையா? எத்தனை முறை சொன்னேன் – நீ குடித்த பிறகு அதை மீண்டும் நிரப்பி வைக்க வேண்டும். இவ்வளவு கவனக்குறைவா? பொறுப்புடன் நடந்துக்கொள்.”அந்த மெசேஜின் கடைசி வரி – “மென்மையான பதிப்பு வேணுமா? கடுமையான பதிப்பு வேணுமா?” என AI-ஐப் போல சொல்லப்பட்டிருந்தது! இதைக் கண்ட நெட்டிசன்கள் வெகுவாக ரசித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாகியது. “அம்மாக்கள் ChatGPT-யைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதுமே, நம்மால் தப்பிக்கவே முடியாது!” என ஒருவர் எழுதினார். இன்னொருவர், “இனிமேல் ChatGPT கூட நம்மையும் திட்டும் போது அம்மாக்கள் பின்புலத்தில் இருப்பாங்க!” என நக்கல் செய்தார்.