பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இராணுவம் இன்று நள்ளிரவு நடத்திய தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் இந்தியா தனது தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்க தயார் என்று பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா பதற்ற நிலைமையை தணித்தால், இந்தியாவுடனான பதட்டங்களை குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இன்று (மே 7) தெரிவித்தார்.இந்தியா இனி தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.