பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய ராணுவம் இன்று நள்ளிரவு ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பெரும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு தக்க பதிலடி வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனால்,. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் முளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எந்த நேரமும் பாகிஸ்தான், இந்தியாவை திரும்ப தாக்கும் நிலை உள்ளது.
எனவே, விடுமுறையில் சென்றுள்ள துணை ராணுவ வீரர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, இதற்கான உத்தரவு ஆணை துணை ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.