மத்திய பிரதேசம் டாமோ மாவட்டத்தில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி அரசு கல்வி துறையில் சுமார் 18 ஆண்டுகளாக ஆசிரியர்களாக வேலை பார்த்துள்ளனர். தற்போது ஒரே பள்ளியில் இடம் மாற்றம் கேட்டு விண்ணப்பித்தபோது, ஆவண சரிபார்ப்பின் போது அவர்கள் செய்த ஏமாற்று காரியம் வெளிச்சத்திற்கு வந்தது.இதில் இருவரும் சேர்ந்து சுமார் 1.60 கோடி வரை சம்பளத்தை பெற்றுள்ளர்.
போலி மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் கல்வி ஆவணங்களை பயன்படுத்தி 19 ஆசிரியர்கள் அரசு வேலையில் இருப்பதாக வழக்கு டாமோவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இரட்டை சகோதரிகள் ஒரே சான்றிதழில் வைத்து வெவ்வேறு பள்ளியில் பணிபுரிவது தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் மற்றொருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 19ல், 16 ஆசிரியர்கள் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்கள் இன்னும் பணியாற்றி தான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.