அதிரடி நடவடிக்கை….! 8000 எக்ஸ் கணக்குகள் முடக்கம்…. மத்திய அரசின் உத்தரவு….!!
SeithiSolai Tamil May 09, 2025 05:48 PM

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி எக்ஸ் தளம் 8000 கணக்குகளை முடக்கியுள்ளது. வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் உட்பட பல முக்கியமாவர்களின் கணக்குகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எந்த பதிவுக்காக கணக்குகள் முடக்கப்படுகின்றன என்பதை அரசு தரப்பில் இருந்து குறிப்பிடப்படவில்லை. எனினும் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி உடனடியாக எக்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.