“இந்தியா மீது தாக்குதல் நடத்தலனு அப்பட்டமா பொய் சொல்றாங்க”… பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது… விக்ரம் மிஸ்ரி…!!!
SeithiSolai Tamil May 10, 2025 06:48 AM

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங்க் கமெண்டேர் வியோமிகாசிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.

அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்திய பொதுமக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை பாகிஸ்தான் நேற்று குறி வைத்து தாக்குதல் நடத்து முயன்றது. அதனை இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து முறியடித்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் தாக்குதல்கள் குறித்து மறுப்பது அவர்களது இரட்டை வேடத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் பூஞ்ச், அமிர்தசரஸ் நகரில் இந்தியா தான் தாக்குதல் நடத்தியதாக உலக நாடுகளை ஏமாற்றும் வகையில் சீர்குலைந்த அறிக்கையை பாகிஸ்தானால் மட்டுமே வெளியிட முடியும்.

இதனையடுத்து பாகிஸ்தான் அரசு தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக அமிர்தசரஸ் போன்ற தனது சொந்த நகரங்களை குறிவைத்து இந்தியாவை குறை கூற முயற்சிப்பது மற்றும் ஆயுத படைகள் தான் தாக்குதல் நடத்தியதாக அபத்தமான விளக்கங்களை முன்வைத்து வருகிறது.

மேலும் இதுபோன்று தவறான விளக்கங்களை அளிப்பதில் அவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதை அவர்களது வரலாறு காட்டும். இந்தியா தான் நங்கமா சாஹித் குருத்ராவை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் பொய்யான தகவலை பரப்பி வருவது ஒரு அப்பட்டமான பொய். இதன் மூலம் வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.