பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி ஒப்புதல் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “IMF நிதி ஒப்புதல் பெற்றதற்கும், இந்தியாவின் தந்திர வியூகம் தோல்வியடைந்தது என பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்தார்” பாகிஸ்தான் பயங்கரவாத நிதி ஆதரவுக்காக IMF நிதி தவறாக பயன்படுத்தப்படலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், இந்தியா முன்னதாகவே கடும் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தது. கடந்த கால திட்டங்களில் பாகிஸ்தானின் மோசமான சாதனை, திட்ட செயல்பாடுகளில் பாரபட்சம், நிதி பயங்கரவாத சார்ந்த குழுக்களுக்கு செல்லும் அபாயம் என இந்தியா கவலை தெரிவித்தது.
அதனிடையே, IMF நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், EFF திட்டத்தின் கீழ் $1 பில்லியனை ஒப்புதல் அளித்ததுடன், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (RSF) திட்டத்தின் கீழ் கூடுதலாக $1.3 பில்லியன் நிதியைப் பரிசீலித்தது. இந்த முடிவின் போது, இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததுடன் வாக்களிக்காமல் விலகியது. சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்குவது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
The post appeared first on .