நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு தளபதி (CDS) ஆகியோர் கலந்து கொண்டு, தற்போதைய இந்தியா–பாகிஸ்தான் எல்லை பதற்றம் மற்றும் ட்ரோன் ஊடுருவல் சம்பவங்களை மையமாகக் கொண்டு முக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்வார்கள்.
இந்த சந்திப்பில், எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள், எதிர்ப்பு ட்ரோன் கருவிகளின் செயல்திறன், ராணுவத்தின் தயார் நிலை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நிகழும் வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மதிப்பீடு செய்ய, இந்த உயர்மட்டக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post appeared first on .