டில்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, மருத்துவ காரணங்களுக்காக தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் நிலைய விடுப்பு உட்பட எந்த வகையான விடுப்பும் மறு உத்தரவு வரும் வரை வழங்கப்படக்கூடாது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது என்றும், விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.