பாகிஸ்தானும் இந்தியாவை தாக்கும் முயற்சிகளை தீவிரப் படுத்தி வருகிறது.. எனினும் இந்தியா தனது முழு சக்தியை பயன்படுத்தி பாகிஸ்தானை மண்ணை கவ்வ செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை இந்திய பாதுகாப்பு படை திறம்பட செயல்பட்டு தடுத்து அழித்துவிட்டது. இந்த நிலையில் என்றும் நாளையும் இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக சில நகரங்களுக்கு ரத்து செய்துள்ளது.
அதன்படி இன்று இரவு 11:59 மணி வரை ஸ்ரீநகர் ஜம்மு அமிர்த சரஸ் சண்டிகர் தர்மசாலா பிஹார் ஜோத்பூர் கிஷங்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு தனது விமான சேவையை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. மேலும் பயணிகள் தங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை இணையத்தில் ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள இண்டிகோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீர் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உச்சகட்ட பாதுகாப்பில் அந்த எல்லை ஓர மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அபாயகரமான பகுதிகளில் விமான சேவைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் தடையை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறவும் தனது பத்து நகரங்களுக்கான விமான சேவை ஒரு நாள் நாளை மட்டும் ரத்து செய்துள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் முழு வீச்சில் தடுத்து பதிலடி கொடுத்து வருகிறது. இதேபோன்று தினமும் நடந்தால் இருநாட்டு பொருளாதாரம் பெரிய அளவு பாதிக்கும் என கூறப்படுகிறது.