பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் குறையவில்லை. நேற்று எல்லையோர மாநிலங்களில் டிரோன்களை ஏவி தாக்கிய பாகிஸ்தான், இன்றும் இரண்டாவது நாளாக தாக்கி வருகிறது.
இதனையடுத்து சண்டிகர், அமிர்தசரஸ், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி,சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர்க், பாட்டியாலா, ஷிம்லா, கங்ரா ககாய், பதிண்டா, ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகாநீர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முந்த்ரா, ஜாம் நகர், ஹிரசர், போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் ஆகிய விமான நிலையங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 15 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.