இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி திடீரென பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7 ம் தேதி எல்லையைத் தாண்டி ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்கி வருகின்றன. 4 வது நாளாக இன்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களில் தீவிரமடைந்த எல்லை தாண்டிய சண்டையில் ஒரு மூத்த அரசு அதிகாரி உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
புதன்கிழமை பூஞ்சில் 12 பொதுமக்களும், வெள்ளிக்கிழமை உரி மற்றும் பூஞ்சில் இருவர் கொல்லப்பட்டனர். இன்று காலை பாகிஸ்தான் நடத்திய ட்ரான் தாக்குதலில் ஒரு மூத்த அரசு அதிகாரி உட்பட மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.