#featured_image %name%
அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியத் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், சொன்ன வாக்கை மீறி இன்று மாலை பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்தியது. இதை அடுத்து இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும். – இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் சமூகத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
தாக்குதல் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறீத் தாக்குதல் நடத்தியது, இது இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ ரீதியான தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்குப் பிறகு முடிவுக்கு வரும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் கெஞ்சியதன் அடிப்படையில் அமைதி ஏற்படுத்தும் விதமாக, தாக்குதல்களை இந்தியா நிறுத்திய நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் தமது பதிவில் “சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
ராணுவ ந்டவடிக்கையை நிறுத்தும் அறிவிப்புகள் வெளியான அடுத்த 3 மணி நேரத்துக்குள், ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொட்ர்ந்தது. கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதாகத் தகவல் வெளியானது.
பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையக,ம் ஆகியவற்றையும் பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால், உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் குஜராத்தின் கட்ச் பகுதியில் பல ட்ரோன்கள் வந்துள்ளது. இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் ட்ரோன் தாக்குதல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது, இன்று மாலை போடப்பட்ட தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை பாகிஸ்தான் மீறியது. அதற்கு தகுந்த பதிலடியை ராணுவம் கொடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
News First Appeared in