இந்திய தேர்தல் ஆணையம்... நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!
Dinamaalai May 11, 2025 03:48 AM

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம்  நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது  . 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்திறனை கணக்கில் கொண்டு  நாம் தமிழர் கட்சியை 10-05-2025 அன்று மாநில கட்சியாக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று அக்கட்சிக்கு "கலப்பை ஏந்திய விவசாயி" சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.