முன்னாள் பாமக எம்எல்ஏ மகள் மீது கொலை வெறித் தாக்குதல்... பரபரப்பு புகார்!
Dinamaalai May 11, 2025 04:48 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக முன்னாள் எம்எல்ஏ காசாம்பு பூமாலையின் மகள் ஆனந்த நாயகி.  மந்தைவெளி பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அதில் 2023ம் ஆண்டு தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய தனது தாயார் காசாம்பு பூமாலை தனது ஆதரவாளர்களுடன், தான் வசித்து வந்த வீட்டில் பூட்டை உடைத்து தாக்கி பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர். தனது மகள்களின் கல்விச் சான்றிதழ் உட்பட பணத்தையும் பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டனர்.
 
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு தனது பொருட்களையும், மகளின் சான்றிதழையும் மீட்டுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு, தன் வீடு தாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ பதிவையும் ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.