“முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால்….” தமிழக முதலமைச்சருக்கு மனசு இல்ல…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம்….!!
SeithiSolai Tamil May 12, 2025 01:48 AM

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்தனர். விழா தொடக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பிறகு பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, எம்பிசியில் வழங்கப்படும் 20% வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு பொய் கூறுகிறது.

ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களுக்கு பங்கு மிக மிக சொற்பமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைத்தது. ஆனால் மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

புள்ளியில் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் தனது கிராமத்தில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் கல்வி கட்சி இருக்கிறார்கள்? எத்தனை பேர் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள்? என்பதை கணக்கிட உரிமை உள்ளது. அது போன்ற மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சருக்கு உரிமை இருக்கிறது.

ஆனால் முதலமைச்சர் கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவிக்கிறார். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையிலேயே இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார். கணக்கெடுப்பு நடத்த நிதி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் தமிழக முதலமைச்சர் மனமில்லாமல் கணக்கெடுப்பை நடத்தாமல் உள்ளார் என விமர்சித்து பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.