இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் என்னுடன் பணியாற்றிய 5 சகோதரர்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகங்கள் எப்போதும் நினைவில் இருக்கும். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுகு நாங்கள் பொறுமையுடன் இருந்து பதிலடி கொடுத்துள்ளோம். இதனால் தாக்குதல் தீவிரம் அடையாமல் நம் நாட்டின் ஒரு ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் நம் நாட்டின் மீது தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்திய போது இந்திய ராணுவம் தடுப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் அதனை முறியடித்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்ததன் மூலம் பயங்கரவாதியை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு வலியை உணர செய்துள்ளோம். பயங்கரவாதிகளை அழிப்பதே நமது நோக்கம். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் சார்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.