இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறகு நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த ஒரு உடன்பாட்டை எட்டின. ஆனால் சில மணி நேரத்திலேயே இந்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், இந்தியாவின் கடும் கண்டனத்தை பெற்றது. உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.
இந்நிலையில், போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ’பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் நிலைமையைக் கையாள்கின்றனர்’ என்று கூறினார்.