தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும்.
இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 2.0 ஆக உள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் உச்சபட்சமாக இந்த விகிதம் 3.0 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உத்திர பிரதேசம் (2.7), மத்திய பிரதேசம் (2.6), ராஜஸ்தான் (2.4), ஜார்கண்ட் (2.3) என தேசிய சராசரிக்கும் கூடுதலாக கொண்டுள்ளன.
தென் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கு குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 1.4 ஆக குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது.
இதுபோன்ற ஏற்றத்தாழ்வான நிலைமை புதிதாக உருவாகவில்லை என்றாலும், கடந்த கால தரவுகளுடன் ஒப்பு நோக்கினால் தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்திருக்கிறது. முன்னர் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வு . தற்போது 0.3 புள்ளிகள் குறைந்துள்ளது.
இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 1950-ம் ஆண்டில் 5.7 ஆக இருந்தது. தற்போது SRS 2021 தரவுகள் படி அது 2.0 ஆக உள்ளது. ஒரு நாட்டில், நிலையான மக்கள் தொகையை பராமரிக்க இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். கேரள மாநிலம் இந்த நிலையை 1988 ஆம் ஆண்டில் எட்டியது. அதையே தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000 ஆம் ஆண்டுகளிலும் எட்டின.
குழந்தை குழந்தைப் பிறப்பு விகிதம் சரியும் போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும். அதே சமயம், மக்களின் நல்வாழ்வில் ஏற்படும் தாக்கம் சராசரி ஆயுளை அதிகரிக்கும். இந்த இரண்டு போக்குகளையுமே SRS 2021 தரவுகளில் பார்க்கலாம். அதன்படி, 0-14 வயது பிரிவில் மக்கள் தொகை மெல்ல குறைந்து வந்துள்ளது.
1971-ல் 41.2% ஆக இருந்தது 2021-ல் 24.8% ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பங்களிக்கும் 15-59 வயது பிரிவினரின் மக்கள் தொகை 54.4%லிருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது. அதே போல, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 5.3% லிருந்து 5.9% ஆக உயர்ந்துள்ளது, அதே போல 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 6% லிருந்து 9% ஆக அதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை குறித்து, 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பர் என்று கூறுகிறது. 2046-ம் ஆண்டுக்குள் முதியவர்கள் 0-15 வயது பிரிவினரை விட அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நாட்டிலேயே அதிக முதியவர்கள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. கேரள மக்கள் தொகையில் 14.4% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இது 12.9% ஆக உள்ளது என்று SRS 2021 தரவுகள் கூறுகின்றன. பிஹாரில் மிகக் குறைவாக 6.9%, அசாமில் 7%, தில்லியில் 7.1% முதியோர் உள்ளனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம், "முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றத்தின் போக்கில் ஏற்படும் இயல்பான வேறுபாடுதான். முதியவர்களுக்கு தேவையான உடல்நலம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், முதியவர்கள் காப்பகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டை பாதிக்காது என்று கருதுகிறேன்," என்று கூறினார்.
"ஏனென்றால் தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் திறன்மிக்கவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள். எனவே வேலை செய்யும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அவர்களின் உற்பத்தித் திறன் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது.
1990களின் பிற்பகுதியில் மக்கள் தொகையின் பலன்களை நாம் (demographic dividend) அனுபவித்தோம். பணியாற்றும் வயதிலான மக்கள் தொகை அதிகரித்தது. இப்போது நாம் அந்தக் கட்டத்தை தாண்டி விட்டோம். வளர்ந்த நாடுகளை போல முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது" என்றார் அவர்.
"கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. எனவே முதியவர்களின் பராமரிப்பு சுமை அரசுக்கு அதிகரிக்கும். அதே நேரம் உள்ளூரில் வேலை செய்வதற்கான இளைஞர்கள் குறைவாக இருப்பார்கள்" என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக் கழக மக்கள் தொகை ஆய்வுகள் மையத்தின் தலைவர் டாக்டர் சத்யவான்.
அவர் மேலும் கூறும்போது, "ஒரு நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் போது எழும் முக்கிய சவால் முதியவர்களை பராமரிப்பது. அவர்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும். முதியவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் வேண்டும்." என்று கூறினார்.
இந்தியாவில் வயது முதிர்ந்தவர்கள் 40% ஏழைகளாக இருக்கின்றனர். இந்தியாவில் முதியோர் மக்கள் தொகையில் தென் மாநிலங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி 2036-ம் ஆண்டுக்குள் மேலும் விரிவடையும் என்கிறது ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம்.
"ஒரு பிராந்தியத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது அந்த பகுதி பின் தங்கியிருப்பதன் அறிகுறியாகும். எனவே இந்த பிரச்னையின் அரசியல் விளைவுகளை பார்க்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
அவர் கூறும்போது, "படிப்பறிவு அதிகமாக உள்ள இடத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும். இந்த விகிதம் அதிகரிப்பது பின் தங்கிய நிலையின் ஒரு நேரடி அறிகுறியே" என்றார்.
கல்வியறிவு குறைந்திருப்பதாலேயே இது நடப்பதாக கூறினார், டாக்டர் சத்தியவான், அவர் கூறுகையில்: "தென் மாநிலங்களில் கல்வியறிவு காரணமாக ஒரு குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டனர். எண்ணிக்கையா? அல்லது தரமா? என்ற கேள்வியில் தென் மாநிலங்களில் தரத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. ஒரு குழந்தைக்கு தரமான சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. ஆனால் வட மாநிலங்கள் இன்னும் இந்த நிலைக்கு வரவில்லை" என்றார்.
மேலும் அதனால், "வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் தென் மாநிலங்களுக்கு குடும்பம் குடும்பமாக வருவதை காண முடிகிறது, வேலை செய்பவர்களாக மட்டுமல்ல, தொழில் தொடங்குபவர்களாகவும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். மற்ற தென் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நகரங்கள், சிறு நகரங்கள் அதிகமாக இருப்பதால் இடம்பெயர்ந்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர்" என்று கூறினார்.
இதன் அரசியல் விளைவுகளை பற்றி பேசிய பேராசிரியர் ஜோதி சிவஞானம், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி வெட்டப்படுவதாக கூறினார். அவர் "மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பெரும்பாலும் மக்கள் தொகை அடிப்படையிலும், தனி நபர் வருமானத்தின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் என்பதும் மக்கள் தொகை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட 45% நிதி மக்கள் தொகையை கொண்டு வழங்கப்படுகிறது. உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிட்டால், குறைந்த மக்கள் தொகை இருந்தாலும் அதிக உற்பத்தி கொண்டதாக தமிழ்நாடு இருக்கும், ஆனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை" என்கிறார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா, "நாம் ஒரு சமூகமாக செயல்பட முடியுமா இல்லையா என்ற விளிம்பில் இருக்கிறோம்" என்று குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் முதியவர்களின் மக்கள் தொகையையும் குறிப்பிட்டு 2023-ம் ஆண்டில் பேசியிருந்தார்.
அந்நாட்டின் தேசிய தரவுகள் படி அதே போன்று, இத்தாலியில் 24.5% ஆகவும், பின்லாந்தில் 23.6% ஆகவும், இந்த வயதினரின் மக்கள் தொகை இருந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்ரி பி.குலூஜ், "ஐரோப்பாவின் மக்கள் தொகை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. குறைந்து வரும் பிறப்பு விகிதம், நகரமயமாக்கல், இடப்பெயர்வு ஆகியவை நமது சுகாதாரம், பராமரிப்பு, சமத்துவம் குறித்த அணுகுமுறையை மறுவடிவமைத்து வருகிறது. இதனை அச்சப்பட வேண்டிய பிரச்னையாக பார்க்க வேண்டாம், மாறாக ஆதாரத்தின் அடிப்படையிலான உத்திகளை வகுத்தெடுப்போம்" என்று பேசியிருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு