ஊழியர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் சுவீடன் நிறுவனம்... வருஷத்துக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை… !
Dinamaalai May 14, 2025 12:48 AM

சுவீடன் நாட்டில் பணிபுரிந்து வருபவர்  இந்திய சாப்ட்வேர் டெவலப்பர் அஷுதோஷ். இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்நாட்டில் இயல்பாகவே வழங்கப்படும் ஊழியர் நலன்கள் பற்றி ஆச்சர்ய தகவல்களை பதிவிட்டுள்ளார்.  இந்த தகவல்கள் இந்திய ஊழியர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.  

இது குறித்து  அஷுதோஷ்  முழுநேர ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை. அத்துடன் பொது விடுமுறை நாட்களுக்கு  முந்தைய நாட்களில் அரை நாள் வேலை தான் செய்ய  . புதிய ஊழியர்களுக்கு வரவேற்பாக புதிய iPhone மற்றும் லேப்டாப் வழங்கப்படுகின்றன. உடல் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் முன்னிலைப்படுத்தும் சுவீடிஷ் நிறுவனங்கள், ஜிம்முகள், மசாஜ் மற்றும் ஒத்த நலவாழ்வு சேவைகளுக்கு ₹30,000 முதல் ₹40,000 வரை வழங்கப்படுகிறது.  
அதே சமயத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கும் உடல் நலனுக்காக   ₹30,000 முதல் ₹50,000 வரை வழங்கப்படுகிறது.  மாதம் ஒரு முறை ₹10,000 மதிப்பில் சாப்பாட்டு செலவுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் கார்களை கம்பெனி சலுகையில் லீஸ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  பெற்றோருக்கு 480 நாட்கள் சம்பளத்துடன் (80%) பெற்றோர் விடுமுறை வழங்கப்படுகிறது.
வேலை இழந்தால்கூட, யூனியன் மூலமாக 6–9 மாதங்களுக்கு வருமான ஆதரவு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. கோடை காலங்களில் வேலை நேரம் தளர்வாக இருக்கிறது. “விடுமுறைக்கு மனுவிட வேண்டியதில்லை. அது ஊழியரின் உரிமை” என அஷுதோஷ் கூறுகிறார்.  இந்த வீடியோவை பலரும் இந்திய நிலையை ஒப்பிட்டு நகைச்சுவையுடனும், வருத்தத்துடனும் கருத்துகளை  பதிவிட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.