தெருவையே காணோம்... கண்டுபுடிச்சி தரலன்னா தீக்குளிப்பேன்... நடிகர் ஜி.பி.முத்து பரபரப்பு புகார்!
Dinamaalai May 13, 2025 11:48 PM

 

தூத்துக்குடி மாவட்டத்தில்  பெருமாள்புரத்தில் ஏற்கனவே அமைந்திருந்த ஒரு தெருவையே  காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பிரபல யூடியூபர் ஜிபி முத்து. இவர் நடிகரும் கூட . இவர்  தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜிபி முத்து  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பெருமாள்புரம்  கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 
 


அந்தப் புகாரில் பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.  தனிநபர் ஆக்கிரமிப்பால் 20 ஆண்டுகளில் கீழத்தெரு மாயம் எனவும், தனக்கும், குடும்பத்தினருக்கும் தனிநபர் தொந்தரவு அளிப்பதாகவும் ஜிபி முத்து புகார் அளித்துள்ளார். புகாருக்கு நடவடிக்கையில்லை என்றால் தீக்குளிப்பேன் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஜிபி முத்து புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.