“AUS SQUAD”… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கும் ஆஸி.யின் அதிரடிப்படை.. வெளியானது பட்டியல்..!!!
SeithiSolai Tamil May 13, 2025 03:48 PM

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில் நடப்பு சாம்பியனனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் பேட் கம்மின்ஸ், ஸ்கார்ட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹெசிலவுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஷ், உஸ்மான் கவாஜா, சாம் கோண்ஸ்டாஸ், மேட் குனேமன், லபுஷேன், நாதன் லயன், ஸ்டீல் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், பிரெண்டன் டாகெட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.