'யோகி டா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தன்ஷிகா, மேடையில் இந்த தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார்.விழாவின் பின்னர் மேடையில் உரையாற்றிய விஷாலும், இதை உறுதி செய்தார். இதன்மூலம், கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டியின் மகனாவார். தெலுங்கரான இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இவர் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் "நான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை 4 மாதங்களில் திருமணம் செய்து கொள்வேன். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன். ஆகஸ்ட் 15 இல் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறுகிறது. இது முடிந்ததும் அடுத்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும்" என்றார்.இந்த நிலையில் அவருக்கு சாய் தன்ஷிகாவுடன் காதல் என சொல்லப்பட்டது. இது குறித்து இன்று நடைபெறும் யோகிடா இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்படி தன்ஷிகா பேசும் போது தனக்கும் விஷாலுக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது என அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அவரை தொடர்ந்து விஷால் பேசுகையில், மேல இருக்கு சாமி, கீழே இருக்கு பூமி, எல்லோருக்கும் நன்றி, வணக்கம் என பேசி முடித்தார். தன்ஷிகா திருமணம் குறித்து அறிவித்த போது விஷால் சிரித்தபடியே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.