தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு அல் சபா (2) என்ற மகன் உள்ளான். முகைதீன் பிச்சை வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ரிஸ்வானா பர்வீன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25ஆம் தேதி தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புகாரன் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இவர்களைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் 9498193727, 9498101883 நம்பருக்கு தகவல் தெரிவிக்கும் படி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.