“அந்த மனசு தான் சார் கடவுள்…” சுட்டெரிக்கும் வெயில்….! மக்களுக்கு உதவிய நடிகை டாப்ஸி…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil May 14, 2025 11:48 PM

பிரபல நடிகையான டாப்ஸி இந்த கடுமையான வெயில் காலத்தில் ஏழை மக்களுக்கு குளிரூட்டப்பட்ட குடிநீர் கலன்கள் மற்றும் இன்சுலேட்டட் பாட்டில்களை வழங்கியுள்ளார். ஹெம்கோத் பவுண்டேசனுடன் இணைந்து டாப்ஸி மக்களுக்கு உதவி செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, இது வெயிலுக்கு உதவக்கூடிய அடுத்த கட்ட முயற்சி.

 

View this post on Instagram

 

ஒரு முறை உங்கள் வசதிகளை விட்டு வெளியே வந்து உதவி செய்யும் மகிழ்ச்சி உண்மையானது. நீங்களும் அதை முயற்சி செய்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். டாப்சி ஏற்கனவே பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களுக்கு விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.