4000 பாதுகாப்புப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும்… முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, மெக்பூபா முஃப்தி கடிதம்.. !!!
SeithiSolai Tamil May 20, 2025 09:48 PM

ஜம்மு காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகள் உள்ளன. இதனை பாதுகாக்க நிலையான காவலர் தேவை. இதற்கு சுமார் 4000 முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உள்ளதாக உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இளைஞர்களை அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீரில் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4000 முன்னாள் ராணுவ வீரர்களை பணியாரத்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். தனது முன்னாள் படை வீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில் இந்த நடவடிக்கை கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.

குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வருகின்றனர். இந்நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையான காவலர் பணிக்கு ராணுவ முகத்துவம் தேவையில்லை உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த பயிற்சி அளிக்க முடியும். இத்தகைய வேலை வாய்ப்பு அவர்களுக்கு ஒரு முக்கிய உயர்நாடியாக இருக்கலாம்.

உள்ளூர் இளைஞர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியை கட்டி எழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொது பாதுகாப்பை பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்ப்பையும் வளர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.