பிரபல மருத்துவர் அதிர்ச்சி வீடியோ... பீட்சா, பர்கர் 62 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகல... கெடாத பொருள் எப்படி சீரணமாகும்?
Dinamaalai May 21, 2025 04:48 AM

உலகம் முழுவதும் உணவு பிரியர்கள் பீட்சா பர்கர் போன்ற உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வரும்  இயற்கை மருத்துவ நிபுணர்  டாக்டர் ராபர்ட் ஜி. டிபீஸ் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில்  “நல்ல உணவுடன் நலம்பெறு… போலியான பாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்த்து விடுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.  

இந்த வீடியோவில் அவர்  “McDonald’s இல் வாங்கிய பர்கர் மற்றும் Papa John’s பீட்சாவை என் டேபிளில் 62 நாட்கள் வைத்திருந்தேன். சில நாட்களுக்கு ஒரு முறை நான் அதை  புகைப்படம் எடுத்தேன். என்ன நடந்தது தெரியுமா? எதுவும் இல்லை. பூஞ்சை வளரவில்லை, அழுகவும் இல்லை. அதன் மேல் பகுதி மிகவும் கடினமாக மாறியது.


 
“இந்த உணவு கெட்டேடு போகவில்லை… இது உங்களை பயமுறுத்த வேண்டிய விஷயம்!”. பிரிசர்வேட்டிவ் கலந்த பாஸ்ட் ஃபுட் உணவுகள் உங்களுக்குத் தீங்கு தரும்!. McDonald’s போன்ற பாஸ்ட் ஃபுட் உணவுகளில் calcium propionate, BHA, TBHQ போன்ற பாதுகாப்புப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுவதால் தான் அவை கெடவே இல்லை.  இது உணவின் ஆயுளை நீட்டிக்கும். ஆனால் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

இதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால்  ஹார்மோன் கோளாறுகள்,  குடல் நல குறைபாடுகள், உடலில் வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு இவை தானாக ஏற்படலாம். நாளடைவில் இவை தீவிரமாகலாம்.  “உணவு அழியவில்லை என்றால், அது உடலுக்குள் சென்று சீராக ஜீரணமாகுமா?” என்ற கேள்வியுடன் டாக்டர் டிபீஸ் வீடியோவை முடிக்கிறார். “பொய்யான உணவுகளை விலக்குங்கள்… இயற்கையான உணவுகளுடன் உங்கள் உடலை நலமாக்குங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.