நடுத்தெருவில் பாதசாரி ஒருவரால் திருடருக்கு நேர்ந்த விபரீதம்… துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டு… வைரலாகும் வீடியோ..!!!
SeithiSolai Tamil May 21, 2025 05:48 AM

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு நபர் சாலையில் அமைதியாக நடக்கிறார். ஆனால் அவர் நடக்கும் விதமே, ஒருவரை வழிப்பறி செய்ய தேடுவது போல இருந்தது.

அதற்குள், சாலையின் மறுப்புறம் நடந்து கொண்டிருந்த ஒரு நபரை அவர் கவனிக்கிறார். உடனே அந்த நபரின் அருகே சென்று திருட முயற்சிக்கிறார். அவரின் மோசமான எண்ணத்தைக் கண்டவுடனேயே, அந்த பாதசாரி எதிர்பாராத வேகத்துடன் முதலில் அந்த திருடரை ஒரு காலால் எட்டி உதைக்கிறார். அதன் பின்னர் சரமாரியான அடிகள். அந்த திருடரை கீழே தள்ளி மிதித்து கொண்டே காவல் துறையினருக்கு போன் செய்கிறார்.

இதனால் திருட முயன்ற நபர் முழுமையாக வீழ்த்தப்பட்டார். பாதசாரியின் வேகமான அடிகளால் திருடனால் சாலையில் கீழே விழுந்து நிலைதிரும்ப முடியாமல் ஆனார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைதள பயனர்கள் சிலர் இதை “துரித நியாயம்” (instant justice) என வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.

தன்னார்வத்தில் தற்காப்பு செய்யும் இந்த மனிதரின் துணிச்சலும் நேர்மையும், திருடர்களுக்கு பாடமாக மாறும் என மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.