%name%
ஐ.பி.எல் 2025 – லக்னோ vs ஹைதராபாத் – லக்னோ – 19.05.2025
லக்னோ பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததுமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/7, மிட்சல் மார்ஷ் 65, எய்டன் மர்க்ரம் 61, நிக்கோலஸ் பூரன் 45, ஈஷன் மலிங்கா 2/28, ஹர்ஷ் துபே, நித்தீஷ் குமார் ரெட்டி , ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (206/4, அபிஷேக் ஷர்மா 59, ஹென்றி கிளாசன் 47, இஷான் கிஷன் 35, கமிந்து மெண்டிஸ் 32, அதர்வா டைடே 13, திக்வேஷ் ரத்தி 2/37, வில் ஓ ரூர்கே, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (39 பந்துகளில் 65 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் எய்டன் மர்க்ரம் (38 பந்துகளில் 61 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர். ரிஷப் பந்த் (7 ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை. நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார். இவருக்குப் பின்னர் வந்த ஆயுஷ் பதோனி (3 ரன்), அப்துல் சமத் (3 ரன்), ஷர்துல் தாகூர் (4 ரன்), ரவி பிஷ்னோய் (ஆட்டமிழக்காமல் 4 ரன்), ஆகாஷ் தீப் (ஆட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) வேகமாக ரன் சேர்க்கும் முயற்சியில் வந்தது ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.
206 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அவர்களது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் இன்று விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அதர்வா டைடே (13 ரன்) விளையாடினார். அவர் இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணி ஜெட் வேகத்தில் ரன் சேர்த்தது.
அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைச் சதம் அடித்தார். அபிஷேக் ஷர்மா (20 பந்துகளில் 59 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), இஷான் கிஷன் (28 பந்துகளில் 35 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (21 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
இடையில் அபிஷேக் ஷர்மாவுக்கும் திக்வேஷ் ரத்திக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு அதற்காக திக்வேஷ் 50% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலு ஒரு ஆட்டம் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மாவுக்கு 25% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. இறுதில் 18.2 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி லக்னோ பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டது.
இனி பிளே ஆஃப்க்குச் செல்லும் அணி மும்பையா அல்லது டெல்லியா என்பது தீர்மானிக்கப்படவேண்டும்.
News First Appeared in