என்னவொரு வெறி? எவ்வளவு குரூரத் தனம்?
Dhinasari Tamil May 20, 2025 09:48 PM

%name%

நிச்சயமாக இவர்கள் முட்டாள்களில்லை. ஒரு தரப்பினர் சொல்வது போல் ‘பப்பு’ என்றோ, ’கோமாளி’ அல்லது ‘பைத்தியம்’ அல்லது ‘அறிவுக்குறைவு’ என்றோ சொல்லிவிடமுடியாது. இவர்களின் நடத்தை முழுக்க முழுக்க, தேச விரோதம், வெறி, குரூரத்தனம் ஆகியவை மட்டுமே! அதைத்தான் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. 

ஆபரேஷன் சிந்தூர் – விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தொடக்கத்தில் தெரிவித்தது காங்கிரஸ்.  காரணம் அப்போது பாகிஸ்தான் கூறி வந்த பொய்களை மட்டுமே நம்பியது காங்கிரஸ். அக்கட்சியின் சார்பில்  கூட்டங்களில் கலந்து கொண்ட ராகுல் காண்டி, அதையேதான் தனது பேச்சுகளில் எதிரொலித்தார்.  ஆனால் ஆபரேஷன் சிந்தூர்  குறித்த செய்திகள், சர்வதேச அளவில்  இந்தியாவின் மரியாதையை மெல்ல மெல்ல உயர்த்திக் கொண்டு வந்த போது,  வழக்கம்போல் பொறாமை அரசியலின் வெளிப்பாடாக  இப்போது இல்லாத பொய்களை எல்லாம் திரித்து கூறி தேசிய அரசியலில் அசிங்கப்பட்டு வருவது மட்டுமல்ல மக்களின் வெறுப்பையும் தொடர்ந்து பெற்று வருகிறார் ராகுல் காண்டி.

ஆப்ரேஷன் சிந்தூர் விஷயமாக  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஊடகங்களில் பேசியபோது,  மிகத் தெளிவாக ஒரு கருத்தை முன் வைக்கிறார்.  ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய போது  நாம் பாகிஸ்தானுக்கு மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னோம். நாம் பயங்கரவாத கட்டமைப்புகளின் மீது மட்டுமே தாக்குதலை நடத்துகிறோம்; அந்த நாட்டின் ராணுவத்தின் மீதோ அல்லது பொதுமக்களின் மீதோ அல்ல என்பதை செய்தியாக சொன்னோம்.  ஆனால் அவர்கள் ராணுவம் தாங்களாகவே உள்ளே இழுத்துக் கொண்டது.  அவர்கள்  நம் செய்தியை மதிக்கவில்லை”  என்று இந்திய ராணுவம் செய்தி தொடர்புகளில் என்ன தகவலை சொல்லி வந்ததோ அதையே தன் குரலாக வெளியிட்டார்.

ஆனால் வழக்கம்போல் பொய்களை மட்டுமே திரித்து வெளியிடும் இந்திரா காங்கிரஸ்,  எதிர்க்கட்சி காண அரசியலைச் செய்யாமல், அவியலையும் ஒழுங்காக செய்யத் தெரியாமல்,  சமையலை எவரும் உண்ண முடியாமல் காறித் துப்ப வைத்திருக்கிறது.

ஜெய்சங்கர் பேசிய ஊடக பேட்டியில் மிகத் தெளிவாக  ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம் என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் காங்கிரஸ் அதை ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன் பாகிஸ்தானை எச்சரிப்பதற்காக வெளியுறவுத்துறை இவ்வாறு ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போகிறோம் என்று  முன்கூட்டியே செய்தி அனுப்பியதாக பொய்யான தகவல்களை பரப்பியது. 

இவ்வாறு சமூகத் தளங்களில் பரப்பப்பட்ட போதே,  இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை (பி ஐ பி)  தனது உண்மை சரிபார்ப்பு குழுவின் மூலம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.  இவ்வாறு ஜெய்சங்கர்  அப்படி  முன்பே தகவல் எதுவும் கொடுத்ததாக வீடியோ எதுவும்  வெளியில் வரவில்லை. என்று மறுத்தது. அதாவது இந்த வீடியோ செய்தி குறித்து ஃபேக்ட் செக் செய்து, முன்கூட்டியே தகவல் எதுவும் தரவில்லை என்பதை உறுதிப் படுத்தியது. 

பி ஐ பி யின் உண்மை சரிபார்ப்பு குழு மே 15ஆம் தேதி இவ்வாறு எக்ஸ் தளத்தில் தெளிவாக வெளியிட்டது .

ஆனாலும் நான்கு நாட்கள் கழித்து மலினமான அரசியலுக்காக பாகிஸ்தானின் குரலை பேசும் வகையில்,  இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போவதாக முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது என்ற போது இந்தியாவின் எத்தனை விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டன அதற்கான கணக்கை வெளியிடுங்கள் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் பதிந்தது பலரையும் முகம் சுளிக்க மட்டுமல்ல கடுமையான கோபத்தையும் வர வைத்துள்ளது.  

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பேசிய வீடியோக்களில் ராணுவம் குறிப்பிட்டபடி, நாம் முதலில் பயங்கரவாத முகாம்களைத் தான் குறிவைத்துத் தாக்குவோம் என்ற செய்தியை அவர்களுக்குக் கொடுத்தோம் என்றுதான் மே 10க்குப் பிறகான பேட்டிகளில் சொல்கிறார்.

செய்தி தெளிவு – நாங்கள் தாக்குவது பயங்கரவாத முகாம்களை – இராணுவமோ பொதுமக்களோ அல்ல என்ற செய்தியை – என்பதாகத்தான் சொன்னார். இந்த வார்த்தைகளை குயுக்தியாக எடுத்துக் கொண்டு, வழக்கம்போல் வெட்டி ஒட்டி செய்யும் வேலைகளை செய்து ராகுல் பேசும் அரசியல் – கோமாளித்தனமாகத் தெரியவில்லை, குரூரத் தனமாகவே தெரிகிறது.

இவ்வாறு சமூகத் தளங்களில் பொய்களைப் பரப்புபவர்கள் – “நாங்கள் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” என்று தடயங்கள் எதுவும் இல்லாத வெற்றுப் பொய்களை மட்டுமே சொல்லி வந்த பாகிஸ்தானின் குரலையே ராகுல் எதிரொலிக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், அதிலும் அவர்களை அறியாமல் பாகிஸ்தானுக்கும் ஒரு தீயதையே செய்திருக்கிறார்கள். முன்கூட்டியே தகவல் வரப்பெற்றும், பாகிஸ்தான் தனது பயஙகரவாத முகாம்களையும் பயங்கரவாதிகளையும் பாதுகாக்காமல், பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்காமல், இப்படி பலரையும் சாகடிக்க வைத்துள்ளதே – என்று பாகிஸ்தான் மக்கள் யோசிக்க மாட்டார்களோ?! ஒருவேளை அப்படியெல்லாம் யோசித்து அரசியல் செய்வதற்கு பாகிஸ்தானில் இந்திரா காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைப் போன்ற தேச விரோதிகள் இல்லை என்ற தைரியம் தான் காரணமோ?!

இவ்வளவு நடந்த பிறகு, பொய்யான போலியான கருத்துகளைத் திரித்து வெளியிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

அப்பாவி சுற்றுலா பயணிகளை கொலை செய்தால் கண்டிப்பாக இந்திய ராணுவம் களத்தில் இறங்கும் என்பது, உலகத்திற்கே தெரிந்திருக்கும்போது, பாகிஸ்தானுக்குத் தெரியாதா என்ன?! காரணம், காஷ்மீருக்குள் பயங்கரவாதப் போர்வையில் இந்தப் படுகொலைகளைச் செய்ய அனுப்பப்பட்டவர்கள் நம் ராணுவத்தின் பயிற்சி பெற்ற இரண்டு கமாண்டோகள் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்கு புரியாதா என்ன.  அல்லது அவர்களை இந்திய ராணுவம் சரியாக அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் என்பதும் அதற்கு தெரியாதா? என்ன?!  ஆனால் ராகுல் காண்டிக்குத் தெரியாமல் போனது அதிசயம் தான்!

இப்போது, எந்தத் தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருக்கிறார் என்ற கேள்விகளை நாட்டு மக்கள் எழுப்புகிறார்கள். முன்னர், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததாக இந்திய ராணுவம் சொன்னபோது, Surgical strike பற்றிய ஆதாரத்தை இந்திய ராணுவம் வெளியிட வேண்டும் என கேட்டவர்தானே ராகுல் காண்டி. 

பொய்களை மட்டுமே ஊடகங்களிலும், அந்நாட்டு பார்லிமெண்டிலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமருக்கும், இந்திய எதிர்க் கட்சித் தலைவருக்கும் எந்த வித்தியாசமும் தென்படவில்லை. 

சீனாவின் டம்மியான டிரோனை பேட்டியின் போது  கையில் வைத்துக் கொண்டு இதே போன்ற கருவிகளை இந்தியாவால் செய்ய முடியாது என சீன அரசுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்ததும் இதே ராகுல் காண்டி. 

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பும் ராகுல் சந்தேகம் கிளப்புகிறார். 

ராணுவம் சொன்னபடி, இந்திய எல்லைக்குள் மட்டுமே பறந்து பாகிஸ்தானை வீழ்த்தியதாக இருந்தால், இந்திய நாட்டின் எல்லைக்குள் பறந்த விமானங்களை பாகிஸ்தான் எப்படி சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்ற  அடிப்படைக் கேள்வி கூட ராகுலுக்குத் தோன்றவில்லையா!?

ஒருவேளை அப்படி ஒரு விமானத்தையாவது  பாகிஸ்தான் தாக்கி இருந்தால், அனைத்து விமானங்களையும் இந்தியா பாகிஸ்தானுக்கு பேரழிவைப் பரிசாக அளித்திருக்குமே! 

இந்திய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் ஏவுகணைகளைக் கொண்டு அவற்றைத் தாக்கி இருக்க முடியும். அவ்வாறு பாகிஸ்தான் தாக்கி இருந்தால் இந்திய விமானப் படையின் அந்த விமானங்களைக் காட்சிக்கு வைத்து உலகுக்கே இந்நேரம் பீற்றிக் கொண்டிருப்பார்களே! அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றபோதே, உணமையை உணர்ந்து கொள்ள வேண்டாமா?!

இப்போது, பாகிஸ்தான் மீடியாக்களில் ராகுல் காண்டியின் பேட்டி தான் தலைப்புச் செய்தியாக சென்று கொண்டு வருகிறது! இந்திய எதிர்க்கட்சித் தலைவரே ஒப்புக் கொண்டார் பாகிஸ்தான் ரபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்! ராகுல் செய்வது எதிர்க்கட்சி அரசியல் அல்ல, தேச விரோதம் என்று தெரிந்ததால் தான், காங்கிரஸின் பழுத்த தலைகளே இப்போது காங்கிரஸை ஓரம் கட்டி விட்டு, அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய நாட்டின் ரத்தம் ஓடும் எவருமே இப்படி அந்நிய நாடுகளுக்கு ஒத்தூதிக் கொண்டு வயிறு வளர்க்க மாட்டார்கள். 

இந்திரா காங்கிரஸ் – தேசியத்தின் சாபக்கேடு! ராகுல் காண்டி – நாட்டின் சாபக்கேடு!

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.