சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கதாநாயகி கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி.
அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிற உடையவள். ஆகவே, சுந்தரி சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள். இந்தத் தொடரில் கேப்ரில்லா, கிருஷ்ணா, ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா, பேபி அஹானா, லிதன்யா சபாலன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
கன்னட மொழியில் துவங்கப்பட்ட சுந்தரி என்ற தொடரின், தமிழாக்கம் ஆகவே அதே பெயரில் கடந்த 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் சுந்தரி துவங்கப்பட்டது. இந்த தொடர் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், இந்த சீரியலில் ஹீரோ- வில்லனாக நடித்து கலக்கியிருந்தவர் ஜிஷ்ணு மேனன். இந்த சீரியலின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.
எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கும் புதிய தொடரில் ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனிடையே, நடிகர் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகர் ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு கோயிலில் உற்றார் உறவினர் முன்னிலையில் எளிமையான முறையில் இன்று(மே 14) திருமணம் நடைபெற்றுள்ளது.