தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர். வேலைக்காக வெளியே செல்பவர்கள் கூட வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் முடிந்தவரை வெளியில் செல்வதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறிகள் ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பலரது தூக்கமும் கெட்டுவிடுகிறது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத இந்த கோடை வெப்பத்தை தணிக்க மத்திய அரசு ஒவ்வொரு வீடுகளுக்கும் இலவசமாக 5 ஸ்டார் ஏசி வழங்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலி செய்தியா என்று பலரும் குழப்பத்தில் இருந்தவர். இந்நிலையில் தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர் அறிவிப்பின்படி, அனைவருக்கும் இலவசமாக 5 ஸ்டார் ஏசி வழங்கப்படும் என்ற செய்தி வதந்தியே. மத்திய அரசு அப்படியான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.