இந்திய வெளியுறவுத்துறை புதிய இ- பாஸ்போர்ட் பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய RFID சிப், ஆண்டனா பொருத்தப்பட்டு இருக்கும்.
அதன் மூலம் ஒரு தனிப்பட்ட நபரின் தரவுகள், கைரேகை, முக அமைப்பு ஆகியவை டிஜிட்டல் முறையில் என்ஸ்கிரிப்ஷன் செய்யப்பட்டு பதிவாகி இருக்கும். இதன் மூலம் விமான நிலையங்களில் வெகு விரைவாக பாஸ்போர்ட் சரிபார்ப்பு செய்யப்படும்.
எனவே மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. அந்த இ-பாஸ்போர்ட் கடைசி பக்கத்தில் மேற்கூறிய சிப் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இ- பாஸ்போர்ட் முறை முழுமையாக அமலுக்கு வந்தால், போலி பாஸ்போர்ட் மோசடிகள் தடுக்கப்படும் எனவும், கூடுதல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 13 நகரங்களில் மட்டுமே இ- பாஸ்போர்ட் முறை அமல் செய்யப்பட்டுள்ளது. இனி புதிய பாஸ்போர்ட் வாங்குவோருக்கு இ- பாஸ்போர்ட் கொடுக்கப்பட உள்ளது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.