#featured_image %name%
‘அந்த’ தீர்ப்பு ஒத்திவைப்பு! நோட்டீஸுக்கு ஸ்டாலின் விமர்சனம்! தில்லிக்குப் பறந்த ஆளுநர்!
கெடு விதித்தற்கு சட்ட விளக்கம் கேட்டு தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், குடியரசுத் தலைவரின் ‘சட்ட விளக்க’ கேள்விகள் கேட்ட செயலுக்கு, தமிழக அரசின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் அமர்வு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மசோதா ஒப்புதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை அறிவிக்கப்பட உள்ளது. மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது குறித்து 14 கேள்விகளை எழுப்பி குடிய்ரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்தார்.
அவர் அந்தக் கடிதத்தில் எழுப்பிய கேள்விகள்…குடியரசுத்தலைவர் எழுப்பிய கேள்விகளின் சாராம்சம்….
பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?
பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?
ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?
142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?
ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமா?
பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
முதல் அமைச்சர் விமர்சனம்!ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளதற்கு, இந்தச் சட்டச் சிக்கலுக்குக் காரணமாகியுள்ள மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று, தனது தவறுகளுக்கு தமிழ்நாட்டைத் துணை கொண்டு, தமிழகமே போராடும் என்று மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில், மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள கேள்விகள்….
1மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை எதிர்ப்பது ஏன்?
2.மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்குவதை சட்டப்பூர்வம் ஆக்க பாஜக முயற்சிக்கிறதா?
3.பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கப் பார்க்கிறதா மத்திய அரசு?
4.பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
5.அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி
6.இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென தில்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்றார். அவருடன் ஆளுநரின் தனிச் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் ஆளுநர் தில்லிக்குச் சென்று இருப்பதாக தகவல் வெளியானது. ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு!குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மத்திய அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதலுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிறுத்தி வைத்தார். இதை அடுத்து, விளக்கம் கேட்டு தலைமை நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
News First Appeared in