பிரபல நடிகரான ரவி மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது , எனது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையின்றி திரிக்கப்படுவது அதிர்ச்சிகரமாக உள்ளது. எனது மௌனம் பலவீனம் அல்ல. அது உயிர் வாழ்வதற்கான முயற்சி. எனது பயணத்தையோ காயங்களையோ அறியாதவர்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்போது நான் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
எனது கடந்த கால திருமண உறவுகளை யாராவது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது புகழுக்கு முயற்சித்தால் அதை அனுமதிக்க மாட்டேன். இது என் வாழ்க்கை என் உண்மை மற்றும் குணமடைந்து வரும் பாதை. சட்ட நடவடிக்கைகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதில் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இத்தனை வருடமாக என் முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். என் குழந்தைகளை விட்டு நான் பிரியவில்லை. அவர்கள்தான் என் சந்தோஷம். அவர்கள் தான் பெருமை எல்லாம். என் முன்னாள் மனைவியை விட்டு தான் நான் விலக முடிவு செய்தேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது என கூறியுள்ளார்.