பயணிகளின் கனிவான கவனத்திற்கு... விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து!
Dinamaalai May 16, 2025 01:48 AM

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட இருப்பதாக   தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே  மக்கள் தொடர்பு அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த  செய்திக்குறிப்பில் ” தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண். 16854), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1,3  தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே   ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி -விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி ண்.16853), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1, 3 தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே   ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.