முடியல... ரணகளத்திலேயும் கிளுகிளுப்பு... வைரலாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' பட போஸ்டர்!
Dinamaalai May 16, 2025 01:48 AM

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை தொடர்ந்து  இந்திய ராணுவம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது. இத்துடன் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.  பாகிஸ்தான் ராணுவ டிரோன்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதால் இந்திய ராணுவம் போர்த்தாக்குதலில் இறங்கியது. தற்போது, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு அடைந்துள்ளனர்.  இருந்தபோதிலும் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்தபடியே உள்ளது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை நிக்கி விக்கி பஹானி பிலிம்ஸ் மற்றும் கண்டெண்ட் இஞ்சினியர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உத்தம் - நிதின் இயக்குகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் என பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்குப் பெயரிட்டபோதே அப்பெயரைப் பெற பாலிவுட்டில் பெரிய போட்டா போட்டி  நிலவியது. இதுவரை, 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மிஷன் சிந்தூர் ஆகிய பெயர்களைப் பெற ஹிந்தி சினிமாத் தயாரிப்பு சங்கங்களை நாடியிருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால், முதலில் யார் பதிவு செய்தார்களோ அவர்களுக்கே பெயர் கிடைக்கும் என்பதால் பதிவு செய்தவர்களிடமும் பேரம் பேசி வருகின்றனராம் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.