இந்திய உணவகத்தின் தேசபக்தி… பில்லில் அச்சிடப்பட்ட வாசகம்… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்…!!!
SeithiSolai Tamil May 16, 2025 01:48 AM

இந்திய இராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பெருமையாக நினைக்கும் சூழலில், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஜவஹர் உணவகம் எடுத்த ஒரு எளிய செயல் இதயத்தைக் தொடும் செயலாக அமைந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த உணவகத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு பில்லிலும் உணவுப் பொருட்களின் விலை பட்டியலுடன் கடைசி வரியாக, “இந்திய ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறேன் – ஜெய் ஹிந்த்” என பிரின்ட் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. கடந்த மே 8, 2025 அன்று வெளியான அந்த பில் புகைப்படம் வைரலாக பகிரப்பட்டதும், பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறிப்பாக இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், ஆயுதப்படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.இதுகுறித்து, “சிறிய செயல், பெரிய தாக்கம்” எனக் கூறும் நெட்டிசன்கள், இது உண்மையான தேசபக்தியின் வெளிப்பாடு என பாராட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் “இந்திய வீரர்களுக்காக நன்றியுடன் நின்ற உணவகம்”, “ஜெய் ஹிந்த்” போன்ற ஹாஷ்டேக்குகளுடன் இந்த செய்தி பரவியுள்ளது.

மேலும் சில சமூக ஊடக பயனர்கள் பலரும் உணவகத்தின் செயலை நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளுடன் வரவேற்றுள்ளனர். “எங்கள் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறோம்”, “நமது வீரர்களை நினைத்து வாழ்த்துவோம்”, “இந்துஸ்தான் ஜிந்தாபாத்” என பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருசிலர் இந்த பில்லின் இடத்தில் உள்ள உணவகமே நேரடியாக இராணுவத்துக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும், பில்களில் எழுதுவதால் மட்டும் உதவி கிடையாது என்றும் விமர்சித்துள்ளன. இருந்தாலும், பெரும்பாலானோர் இந்த செயலை ஒரு உணர்ச்சிபூர்வமான தேசபக்தி அனுபவமாக கருதி பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.