“கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா”.. விருந்து சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!!
SeithiSolai Tamil May 16, 2025 01:48 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்துக்கு பிறகு திடீரென சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

அதோடு வயிற்றுப்போக்கும் ஏற்பட்ட நிலையில் சுமார் 30 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 60 வயது முதியவரான கருப்பையா என்பவர் மருத்துவமனைக்கு செல்லாத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.