ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த மனைவி சித்தப்பா மகனுடன் தொடர்பில் இருந்து எட்டு மாதம் கர்ப்பமானதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொல்ல திட்டமிட்டிருந்த நிலையில் மனைவி இல்லாத காரணத்தினால் மாமியாரை கொலை செய்துவிட்டு சித்தப்பாவின் மகனை தேடி சென்ற இடத்தில் அவர் இல்லாததால் சித்தப்பா மற்றும் சித்தியை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் புது குடியானூர் பகுதியைச் சேர்ந்த பாலு(30). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். பாலு வாலாஜா பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் பயின்று வந்த வாலாஜா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையம் அருகே உள்ள புது குடியானூர் பகுதியில் வாசித்து வந்தனர். இருவருக்கும் 2 1/2 வயதில் அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் அருகே உள்ள சித்தப்பாவின் மகன் விஜய் மற்றும் பாலுவின் மனைவி புவனேஸ்வரிக்கும் திருமணத்தை மீறிய பந்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி புவனேஸ்வரி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக வாலாஜா பகுதியில் உள்ள புதுப்பேட்டை தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி புவனேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவன் பாலுவிற்கு தகவல் தெரிந்துள்ளது.இருவரும் கருத்து வேறுபாட்டில் இருக்கும் நிலையில் எப்படி கர்ப்பமானால் என்பது குறித்து இவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது சித்தப்பா மகனுடன் இருந்த திருமணத்தை மீறிய பந்தத்தால் கர்ப்பமாய் இருக்க கூடும் என்ற ஆத்திரமடைந்த பாலு மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டில் மனைவி இல்லாததால் ஆத்திரம் அடைந்த பாலு மாமியார் பாரதியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த சித்தப்பா மகன் விஜயை கொலை செய்ய வாலாஜா பகுதியில் இருந்து புறப்பட்டு சோளிங்கர் அருகே உள்ள தனது சொந்த ஊரான புது குடியானூருக்கு நள்ளிரவில் இரும்பு ராடுடன் தனது சித்தி வீட்டை அடைந்துள்ளார்.
இந்நிலையில் சித்தியிடம் விஜய் எங்கே?என்று கேட்டதற்கு தெரியாது என்று பதில் கூறியதால் ஆத்திரமடைந்த பாலு,சித்தி ராஜேஸ்வரி மற்றும் சித்தப்பா அண்ணாமலை ஆகியோரையும் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தலை மறைவாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். வாலாஜா மற்றும் கொண்ட பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தற்பொழுது காவல்துறையினர் பாலுவை தேடி வருகின்றனர். இந்நிலையில் பாலு இரும்பு ராடு உடன் சென்ற பாலுவை கொண்ட பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.